Agriculture

நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்!

கால்நடை வளர்ப்பில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கொடுக்கக்கூடியது, நாட்டுக்கோழி வளர்ப்பு. கொட்டகையில் அடைத்துத் தீவனம் இட்டு வளர்க்காமல், நாட்டுக்கோழிகளை அவற்றின் இயல்புபடி மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்தால் ஆரோக்கியமாக வளர்வதோடு, நல்ல விலையும் கிடைக்கும். அந்த வகையில் புறக்கடைக் கோழி வளர்ப்புமுறையில் நாட்டுக்கோழிகளை வளர்த்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம் அரசூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி. ஒரு காலைவேளையில் கோழிக்கொட்டகையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த தங்கமணியைச் சந்தித்தோம். “நான் பொறந்த ஊரு சூலூர் பக்கமுள்ள அருகம்பாளையம். …

நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்! Read More »

நட்டமில்லா விவசாயத்துக்கு கைகொடுக்கும் நாடன் வாழை!

ஒரு ஏக்கர்… ரூ 2,70,000 வருமானம்… நட்டமில்லா விவசாயத்துக்கு கைகொடுக்கும் நாடன் வாழை! (Pasumai Vikatan 25/09/2015) ஏற்றுமதிக்கு ஏற்ற கலப்பின வாழை ரகங்களை சாகுபடி செய்து, அதிக வருமானம் எடுக்கும் விவசாயிகளுக்கு மத்தியில்… உள்ளூர் மார்க்கெட்டுக்கு ஏற்ற நாட்டு வாழை ரகங்களை சாகுபடி செய்து நல்ல வருமானம் எடுக்கும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், கடலூர் மாவட்டம், வழிச்சோதனைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா. இவர், ‘பச்சை நாடன்’ ரக வாழையை சாகுபடி செய்து, லாபகரமான …

நட்டமில்லா விவசாயத்துக்கு கைகொடுக்கும் நாடன் வாழை! Read More »

வாரிக்கொடுக்கும் இயற்கை வாழை!

ரூ 10 லட்சம் லட்சியம்… ரூ 8 லட்சம் நிச்சயம்!மகசூல் இ.கார்த்திகேயன் – படங்கள்: எல்.ராஜேந்திரன் (Pasumai Vikatan Ref 25/04/2017) கல்வித் துறை, காவல் துறையில் பணிபுரிபவர்கள் ஓய்வுக்குப் பிறகும், அது சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றுவதைத்தான் பெரும்பாலும் விரும்புவர். வெகுசிலரே விவசாயத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்புவர். அப்படிக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார், தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியைச் சேர்ந்த முனைவர் பிரபாகரன். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருந்து …

வாரிக்கொடுக்கும் இயற்கை வாழை! Read More »

நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்…

தீவனத்தில் கவனம்… அதிகரிக்கும் லாபம்! கு.ராமகிருஷ்ணன் – படங்கள்: ம.அரவிந்த் (Pasumai Vikatan Ref 25/06/2018) கால்நடை பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல், ஓரளவுக்கு நிலையான வருமானத்தைத் தரக்கூடிய விவசாய உபதொழில், கால்நடை வளர்ப்புதான். அதேசமயம், கால்நடை வளர்ப்பில் அதிகச் செலவு பிடிப்பது தீவனத்துக்குத்தான். அதனால், தீவன மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்டால், நல்ல லாபம் எடுக்க முடியும். அந்த வகையில், நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்டு நல்ல லாபம் எடுத்து வருகிறார்கள், புதுக்கோட்டை மாவட்டம், …

நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்… Read More »

error: Content is protected !!